×

இந்தியர்களுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் மத்திய அரசு படுதோல்வி... கொரோனா வைரஸே வென்றது : ப.சிதம்பரம் சாடல்!!

சென்னை : இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி விநியோகிக்கும் பணிகளில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது என்ற தகவலை  பெருமையுடன் பகிர்ந்து கொள்வதாக ப சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் வெறும் 3 கோடி இந்திய மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது என்பதை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு பரிதாபமான முறையில் தோல்வி அடைந்துவிட்டது என்றும் இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார். கொரோனாவுக்கும் தடுப்பூசிக்கும் இடையிலான போட்டியில் வைரஸே வெற்றி அடைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.எனவே முன்பதிவு உள்ளிட்ட அதிகாரத்துவமிக்க தடைகளை அகற்றிவிட்டு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


Tags : Indians ,SADEL , Corona virus, P. Chidambaram, Sadal
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...