×

தமிழக அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து தலைமையே முடிவு செய்யும்: எல்.முருகன் பேட்டி

பழநி :தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து மத்தியத் தலைமையே முடிவு செய்யும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜ சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் பழநி  தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு அவர் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை நேரில் சந்தித்து, பழநி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பாஜ தலைவர் முருகன் கூறுகையில், ‘‘அறுபடை வீடுகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தோம். தற்போது கூட்டணி கட்சிகளுக்காக வேலை செய்து வருகிறோம். பழநிக்கு அருகே உள்ள தாராபுரத்தில் போட்டியிடுவது பெரிய விஷயம். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக கார்த்திகை தினமான இன்று (மார்ச் 18), பழநி முருகனை வேண்டி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளேன். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக பாஜ தலைமைதான் முடிவு செய்யும். மாற்று கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.

Tags : BJaka ,Cabinet of Tamil Nadu ,LLP ,Murugan , Tamil Nadu Cabinet, BJP, L. Murugan
× RELATED நாகர்கோவில் எல்எல்பி பள்ளி...