×

டி.ஆர்.பி. முறைகேடு வழக்கு!: 3 டிவி சேனல்களின் ரூ.32 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

மும்பை: டி.ஆர்.பி. முறைகேடு வழக்கில் சிக்கிய 3 தொலைக்காட்சிகளின் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. ரிபப்ளிக் டிவி உள்பட 6 தொலைக்காட்சிகளுக்கு எதிராக டி.ஆர்.பி. முறைகேடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் டி.ஆர்.பி. முறைகேடு வழக்கில் சிக்கிய தொலைக்காட்சிகளில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக பேக்ஸ் மராட்டி, வாக் சினிமா மற்றும் மகா மூவி ஆகிய தொலைக்காட்சிகளுக்கு சொந்தமான 32 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மும்பை, இந்தூர், டெல்லி, குருக்ரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தொலைக்காட்சிகளின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனக்கு எதிரான டி.ஆர்.பி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ. அல்லது சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி அர்னாப் கோஸ்வாமி தொடுத்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் நிலையில், வழக்கில் குற்றவாளியாக அர்னாப் கோஸ்வாமியை சேர்க்காததை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் எவ்வளவு நாள் விசாரணையை தொடர போகிறீர்கள்? என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் வினவிய அவர்கள், இன்று காலை 11 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Tags : D.R.P. , D.R.P. Abuse, 3 TV channel, property, enforcement
× RELATED தினமும் எனது கார் சோதிக்கப்படுகிறது;...