இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி ராம் ஸ்வரூப் டெல்லியில் தற்கொலை

புதுடெல்லி:  இமாச்சலப் பிரதேச மாநிலம், மாண்டி தொகுதி பாஜ எம்பி ராம் ஸ்வரூப் சர்மா (62). தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று வெகு நேரமாகியும் அவரது அறை கதவு  திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உதவியாளர், காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி ராம் ஸ்வருப் இறந்து கிடந்தார். முதல்  கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி இருக்கிறது.  

ஆனால், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரி வித்துள்ளார்.  மேலும், மக்களவை  யிலும்  இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>