மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வேட்பு மனுதாக்கல்: அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கினார்

சென்னை: சட்ட மன்ற தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மயிலை.த.வேலு  போட்டியிடுகிறார். அவர் கடந்த 3 நாட்களாக மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெரு, ரங்கநாதபுரம்,  நாயக்கர் தோட்டம், நாட்டு சுப்ராயன் தெரு, காந்தி நகர், சண்முகபுரம், வி.எஸ்.வி. கோயில் தெரு, நாட்டு வீராச்சி தெரு, கல்லுக்காரன் தெரு, மாதவ  பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகவும், டீக்கடை, மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம்  வாக்குசேகரித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று 2 மணியளவில் மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மயிலை கிழக்கு பகுதி  செயலாளர் முரளி, மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி மற்றும் துணை செயலாளர் அசோக் உடன் இருந்தனர். தொடர்ந்து 4 மணியளவில்   121வது வட்டத்தில் உள்ள 1 முதல் 6வது மெயின் ரோடு, துலுக்காணம் தோட்டம், ராகவன் தோட்டம், கோகுலம் காலனி, பி.எம்.தர்கா குடிசைப்பகுதி,  லாயிட்ஸ் ரோடு, மெக்காபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories:

>