×

தொகுதி முழுவதும் வாரி வழங்கினார் சைதாப்பேட்டை 142வது வார்டில் 3.93 கோடி மதிப்பில் நலப்பணிகள்: மா.சுப்பிரமணியன் அசத்தல்

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக மா.சுப்பிரமணியன் 142வது வட்டத்தில் நேற்று (17ம் தேதி) காலை 7 மணி  முதல் பகல் 1 மணி வரை கலைஞர் தெரு, திடீர் நகர், கோதாமேடு, அண்ணாநகர், சலவையாளர் காலனி, அப்துல்ரசாக் தெரு, வினாயம்பேட்டை தெரு  ஆகிய தெருக்களிலும், மாலை 4 மணிக்கு ஆலந்தூர் சாலையில் தொடங்கி, சாமியார்தோட்டம், புஜங்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று  வாக்குச் சேகரித்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் இந்த வட்டத்தில் செய்த பணிகளின்  சாதனைகளை விளக்கி அவற்றைப் பட்டியலிட்டு மா.சுப்பிரமணியன் வாக்குச் சேகரித்தார்.

அதன் விவரம் வருமாறு: 142வது வார்டில் ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு 23 லட்சம் செலவில் 115 மேசை  நாற்காலிகள், சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 70 மேசை நாற்காலிகள், 10 ஸ்டீல் பீரோக்கள் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு 150 வட்ட  வடிவிலான மேசை நாற்காலிகள், கோதாமேடு, வி.வி.கோயில் தெரு உடற்பயிற்சிக் கூடங்களுக்கு தலா 5 லட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள்,  கொத்தவால் சாவடி தெருவில் 35 லட்சம் செலவில் நியாயவிலை கடை எனஎன ₹3 கோடியே 93 லட்சம் ஒதுக்கீட்டில் மேம்பாட்டு பணிகள்  செய்துகொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதி திமுக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன்,  வட்ட செயலாளர் எம்.நாகா, மாவட்டப் பிரதிநிதி ஆர்.ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags : Saitapet ,142nd Ward ,Ma. ,Subramanian , 3.93 crore worth welfare works in 142nd ward of Saidapet: Ma Subramanian Asathal
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது