×

தனியார் மருத்துவமனையில் டிடிவி.தினகரன் உறவினர் மரணம்

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (58). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 25ல் கொரோனா அறிகுறிகள்  இருந்தது. ஆயிரம்விளக்கு பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்,  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர்  நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் அவர்  உயிரிழந்ததார்.  அவரது உடல் பிற்பகல் 3.15 மணியளவில் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. மாலையில் மயிலாப்பூர் சுடுகாட்டில் அடக்கம்  செய்தனர். இவர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் சகோதரியின்  கணவர் ஆவார். இதனால்.தினகரன் நேற்று பிரசாரத்தை ரத்து செய்ததாக  கூறப்படுகிறது.



Tags : DTV.Dhinakaran , DTV.Dhinakaran relative dies at private hospital
× RELATED பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி...