சுறா பட பாணியில் நேரம் முடிந்து தேர்தல் அலுவலகம் சென்ற வேட்பாளரின் மனு ஏற்க மறுப்பு: மாட்டு வண்டியில் பைக்... விறகு கட்டை சமையல் காட்சிகள் ‘புஸ்’

அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் தலைவர் வசந்தகுமார் நேற்று மதியம் மூலக்கடை சந்திப்பில் தொடங்கி எருக்கஞ்சேரி, பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலகம் வரை மாட்டு வண்டியில் சென்றார். அப்போது மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து அதன் அருகே பெண்மணி ஒருவர் அடுப்பில் சமையல் செய்ய வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றார்.  வழிநெடுகிலும் உள்ள மக்கள் அவரை வியந்து பார்த்தனர். காஸ் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இதுபோன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதாக வசந்தகுமார் கூறினார்.

ஒருவழியாக தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சென்றபோது 3 மணி ஆகிவிட்டது. இதனால் உங்களது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளை வாருங்கள் என்று கூறி அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார் வேறு வழியில்லாமல் திரும்பி சென்றார். மாட்டுவண்டியில் வந்த எங்களை போலீசார் பல இடங்களில் மடக்கி தடுத்து நிறுத்தியதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மனு தாக்கல் செய்ய முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories: