×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக மீது முதல்வர் சொல்வது பொய்யானது: வைகோ பேட்டி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி சொல்லும் குற்றச்சாட்டு எதுவும் உண்மை இல்லை என்று வைகோ கூறினார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள் கவர்னரிடம் திமுக புகார் அளித்தது. முதல்வர் எடப்பாடி தனது நெருங்கிய உறவினர்களுக்கு ₹6157 கோடி மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டரை விட்டது, அமைச்சர் காமராஜர் மீது கொரோனா காலத்தில் வாங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்தது, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மீது காக்னிசென்ட் கட்டுமான அனுமதி ஊழல், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது ஆதாரங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல அமைச்சர்கள் மீது அளித்த புகார் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.


ஏழு தமிழர் விடுதலையில் அதிமுக அரசு-கவர்னர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அதை ஒத்துக்கொள்ளவில்லை. கவர்னர் மத்திய அரசை கேட்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், கவர்னர் வேண்டுமென்றே இவ்விவகாரத்தில் முடிவு எடுக்காமல் உள்ளார். 27 ஆண்டுகள் இந்த இயக்கத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறோம். மதிமுகவில் உறுதியாக இருப்பவர்கள் 27 ஆண்டுகள் பயணிக்கின்றனர். இந்த இயக்கத்தை் வலுப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி சொல்லும் குற்றச்சாட்டு எதுவும் உண்மை இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.




Tags : Chief Minister ,DMK ,Jayalalithaa ,Vaiko , Jayalalithaa death, DMK, CM, lie, Vaiko
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...