பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியை கட்டாயம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தத் தவறினால் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான குற்றவாளிக்கு துணைபோகிற குற்றத்தை தமிழக அரசே செய்ததாக கருத வேண்டிய நிலை ஏற்படும்.

இதில், தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்படுவதை பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணைகள், அதிமுக ஆட்சியில் பல வழக்குகளில் சுணக்கம் இருப்பதை போல, இவ்வழக்கிலும் தமிழக அரசு நடந்து கொள்வதாக குற்றம் சாட்ட விரும்புகிறேன். பெண் எஸ்.பி.யை சுங்கச்சாவடியில் வழி மறித்ததாக மற்றொரு எஸ்.பி. பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.   எனவே, பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>