×

பிரதமரை சிறுபிள்ளைதனமாக விமர்சிக்கும் காங்கிரஸ்: முதல்வர் எடியூரப்பா கிண்டல்

பெங்களூரு, மார்ச்18: நாட்டில் இருந்து ஏழ்மை ஒழிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது. இதை புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளை தனமாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``கடந்த 1999ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சென்னை-கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதாது என்பதற்காக உள்ளூர் விமான நிலையங்களும் மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டன. கலபுர்கி, தாவணகெரே, மைசூரு போன்ற மாவட்டத்திலும் சாலை மற்றும் விமான போக்குவரத்திற்காக திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. வாஜ்பாய் வழியில் தற்போதைய பிரதமர் மோடியும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்துவதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் மதசார்பின்மை கொள்கை பேசி ஆட்சி நடத்திய கட்சிகளில் பிரதமராக இருந்த யாரும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றதில்லை. அந்த சூழ்நிலையை மாற்றி, முதல் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் நாட்டில் கால் பதித்தார் என்றால் அந்த பெருமை பிரதமர் மோடியை சேரும். நமது பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளதன் மூலம் 120 கோடி இந்தியர்களை கவுரவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் வரும் ஏப்ரல் மாதம் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார். இந்த உண்மையை புரிந்துக்கொள்ளாத காங்கிரஸ் தேசிய தலைவர்கள் நாட்டின் பலவீனமான பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார். இது அவர்களின் சிறுபிள்ளை தனத்தை காட்டுகிறது என்றார். நமது பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளதன் மூலம் 120 கோடி இந்தியர்களை கவுரவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் வரும் ஏப்ரல் மாதம் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார்.

Tags : Congress ,PM ,Chief Minister ,Eduyurappa , Congress criticizes PM as childish: Chief Minister Eduyurappa teases
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...