×

டூல்கிட் வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு வழங்க தடை கோரிய மனு: மத்திய அரசு, டெல்லி போலீசுக்கு நோட்டீஸ்

புது தில்லி: பருவநிலை மாற்ற தன்னார்வலர் திஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கு கடைசி வாய்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. மத்திய அரசின் புிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் டூலிகிட்ட ஆவணங்களை பதிவிட்டதாக கூறி, சுற்றுசூழல் துறை ஆர்வலர் திசா ரவியை டெல்லி போலிசார் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பெங்களூருவில கைது செய்தனர். அதன்பின் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பிப்ரவரி 19ம் தேதியன்று ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த டூல்கிட் வழக்கு தொடர்பான எந்தவொரு விசாரணை ஆவணங்கயைும் வெளியிட டெல்லி போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் என திசா ரவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று  நீதிபதி பிரதீபா எம் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா மற்றும் வக்கீல் அஜய் திக்பால் ஆகியோரும் டெல்லி போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீலும்  இந்த மனுவிற்கு 2 வார காலத்தில் பதிலளிக்குமாறு  கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில்மனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்குவதாக கூறி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Tags : Tolkien ,Central Government ,Delhi Police , Petition seeking ban on release of Tolkien case details to media: Notice to Central Government, Delhi Police
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு