×

சத்தியமங்கலம் அருகே ஆட்டு வியாபாரியிடம் ரூ.3.40 லட்சம் சிக்கியது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகாலிங்கம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் சோதனையிட்டபோது, லாரியில் வந்த கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் சாத்ஹள்ளி பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது (46) என்பவரிடமிருந்து ரூ.3.40 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில் சபீர் அகமது கோவை சென்று ஆடு வியாபாரம் முடித்துவிட்டு ஆடுகள் விற்பனை செய்த பணம் ரூ.3.40 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கர்நாடக மாநிலம் செல்வதாக தெரிவித்தார். பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

மொடக்குறிச்சியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்:
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைக்கல் பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோலார், மாணிக்கவாசகர் வீதியைச் சேர்ந்த பட்டேல் விஷால் குமார் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.57 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அவ்வழியாக வந்த சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த துளசிமணி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.97 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்தை மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags : Satyamangalam , To a goat dealer near Satyamangalam Rs 3.40 lakh was involved
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...