×

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: 1 லட்சம் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று 1 லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி-பங்குனி திருவிழா கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அக்னிசட்டி, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அதிகாலை பால்குடம் ஊர்வலம் நடந்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. கோயிலில் இருந்து முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வஉசி சாலையிலுள்ள பருப்பு ஊரணியில் கரைக்கப்படுகிறது. சித்திரை  ஒன்றாம் தேதி வரை பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் சங்கங்கள் சார்பில் மண்டகப்படி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறையினர் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி திருச்சி, மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து காரைக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags : Karakudi Muthumaryamman Temple Festival , Karaikudi Muthumariamman Temple Festival: Milk procession of 1 lakh devotees
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி