×

பாசிச பாஜக-அதிமுகவை வீழ்த்துவதே முதல் கடமை திமுக கூட்டணிக்கு 16 அமைப்புகள் ஆதரவு

திருச்சி: தமிழக மக்கள் முன்னணி, தமிழ் தேச நடுவம், திருச்சிராப்பள்ளி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி உள்பட 16 அமைப்புகளின் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று  நடந்தது.தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பொழிலன், கண குறிஞ்சி, பாவேந்தன், நீரோடை நிலவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பார்ப்பனிய பாசிச வெறியை வீழ்த்துவதற்கான வழித்தடத்தில் அரசின் நீதித்துறை, நிர்வாகத்துறை என பல்வேறு அரங்குகளின் முன்னணியும் அதன் உறுப்பியக்தினரும் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றனரோ  அவ்வாறே தேர்தல் களத்தையும் போராட்ட இயக்கக் களமாக பயன்படுத்த வேண்டும். தமிழகம் மட்டுமன்றி மொழித் தேச மாநில அடையாளங்களையும், அவற்றின் உரிமைகளையும் பறித்து நசுக்குவதோடு, மொழி மாநிலங்களின் விளைச்சல்,  உழைப்பு வழி வருவாய்கள், கனிமவளங்களை சூறையாடியும் பாசிச வெளியோடும் பாஜாக அரசு செயல்படுகிறது.

மொழி மாநில உரிமைகளை நசுக்குிறது. வேளாண் மண்டலத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை திணிக்கிறது. வேளாண் சட்டங்களின் பெயரில் உழவையும் உழவர்களையும் அடிமைப்படுத்துகிறது. பாஜகவுக்கு எடுபிடி வேலைகள் செய்வதோடு கங்காணிகளாகவும் செயல்பட்டு வரும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து தோல்வியடைய வைக்க வேண்டியது கட்டாயம். எனவே, திமுக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம்,  தமிழக வாழ்வுரிமைக்கட்சி, கொ.ம.தே.க, ஆதிதமிழர் பேரவை, மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் விடுதலை கட்சி, பார்வேர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் பாசிச பாஜக போக்குளை எதிர்த்து வருவதால், அவற்றுக்கு ஆதரவு  தெரிவித்து அவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவையின் வழியாக இருக்கக்கூடிய மிக் கொடுமையான பார்ப்பனிய பாசிச வெறி பாஜகவை வீழ்த்தியாக வேண்டும்’ என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Fascist Pājaka , The first task is to bring down the fascist BJP-AIADMK
× RELATED திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்