ஜெய் ஸ்ரீ ராம்'என்று சொல்ல வேண்டியிருக்கும்: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்...மம்தா பானர்ஜி பிரச்சாரம்.!!!

ஜார்கிராம்: மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேதி முதல் நடைபெறுகிறது. இதனால், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, நரேந்திர மோடி,பீகார் சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பீகார் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக உறுதியளித்தார்.ஆனால் அவர்கள் தடுப்பூசிகளை வழங்கினார்களா? இல்லை, அவர்கள் செய்யவில்லை, அவர்கள் பொய் சொன்னார்கள் என்றார்.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம், ஏனென்றால், உங்களது தர்மத்தை நீங்கள் பின்பற்ற முடியாது. நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டியிருக்கும், நீங்கள் ஜெய் சியா ராம் என்று சொல்ல முடியாது.ராமர் மா துர்காவை வணங்குவார், ஏனென்றால் அவர் அந்தஸ்தில் மிகவும் பெரியவர் என்றார்.

நான் என் வாழ்க்கையில் பல முறை தாக்கப்பட்டேன். முன்னதாக சிபிஎம் என்னை அடித்து நொறுக்கியது, இப்போது பாஜகவும் இதைச் செய்யத் தொடங்கியது. இருப்பினும், சிபிஎம் மக்கள் இப்போது பாஜகவாகிவிட்டனர். சில துரோகிகள், பேராசை கொண்டவர்களும் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்றார்.

Related Stories: