அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 20, 21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட மழை பதிவு எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories:

>