×

சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி.யை தமிழக அரசு உடனே பணியிடை நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை காத்திருப்போர் பட்டியலில் வைப்பது தண்டனையல்ல என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களுக்கு தமிழக போலீஸ் எப்படி பாதுகாப்பு தரும். பணியில் இருக்கும் சிறப்பு டி.ஜி.பி., விசாரணைக்கு குந்தகம் விளைவிக்க நிறைய வாய்ப்புள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மூத்த டி.ஜி.பி மீதான வழக்கை அவருக்கு கீழ் பணிபுரியும் டி.எஸ்.பி விசாரிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிறப்பு டி.ஜி.பி.யை காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடத்தப்படும் விசாரணை கண்துடைப்பாகவே இருக்கும். சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால், தமிழக அரசே குற்றத்துக்கு துணைபோனதாக கருதும் நிலை ஏற்படும். சிறப்பு டி.ஜி.பி மீது புகார் தர வந்த பெண் எஸ்.பி.யை தடுத்த எஸ்.பி.கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடை நீக்கம் செய்ய கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Tags : DGP ,Congress , Congress
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...