×

உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சுசர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கியூ. ஏர் என்ற நிறுவனம் உலக காற்றுத் தர அறிக்கை 2020 என்ற ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இந்தியா பிரதான இடம் பிடித்திருப்பதும், உலகிலேயே அதிக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சீனாவின் சிங் கியான் நகரத்திற்கு பிறகு 9 இடங்களில், இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், குலஞ்சர், பெஸ்ரப், ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் திவாரி மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவை பிடித்துள்ளன.

டெல்லி மிக மோசமாக மாசடைந்த உலக நாட்டு தலைநகரங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணங்களாக போக்குவரத்து, விறகு எரிப்பது, மின்சார உற்பத்தி, தொழிற்துறை, கட்டுமான பணிகள், குப்பைகள் மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பது ஆகியவை உள்ளன. இவற்றில் முதலிடம் பிடிப்பது போக்குவரத்து தான். காற்றின் தரத்தை மேம்படுத்த பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன் நடை சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிரீன் கியூஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Pollution, 30 cities, 22 Indian cities, study
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...