ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வி.சிவக்குமார் (மாவட்ட அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>