அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் திடீர் அறிவிப்பு

சென்னை: நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக 234 தொகுதிகளிலும் அதிமுக எதிர்ப்பு, பிரசாரத்தை சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்வோம். அதிமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் கள நிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். இடஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>