இரட்டை இலையை தேடாதீங்க...ராஜேந்திர பாலாஜி ரவுசு

அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளராக பாண்டுரங்கன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று கூட்டணி கட்சி ஊழியர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘பால் வியாபாரம் பார்க்க அமெரிக்கா வரை சென்று வந்துள்ளேன். அங்கு மோடியை பற்றி பேசினால் சந்தோசப்படுகின்றனர். அதிமுக கூட்டணியில் புழுக்கம், கலக்கம் இல்லை. நம்மிடம்  சீட் கேட்டு இல்லை என்றதும் அடுத்த கட்சியில் சேர்ந்து சீட் வாங்குகின்றனர். அதிமுகவில் ஒரிஜனல் சரியாக இருக்கிறது. டியூப் லைட் மாதிரி மின்னி வந்தவர்கள் எல்லாம் ‘கரகாட்டக்காரன்’ மாதிரி போய் விட்டனர். தாமரை இங்கு முதல்முறையாக நிற்கிறது. வாக்குச்சாவடியில் போய் மக்கள் இரட்டை இலையை தேடக்கூடாது’’ என்றார். முன்னதாக, ராஜேந்திரபாலாஜி வந்தபோது அவரது வாகனத்திற்கு பின்னால் 20க்கும் மேற்பட்ட கார்கள் வந்ததால் அருப்புக்கோட்டை ரோட்டில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதி்த்தது.

Related Stories:

>