×

3 வார தனிமைப்படுத்துதல் கட்டாயம் எங்கள் நாட்டு தடுப்பூசியை போட்டு கொண்டால் விசா: சீனாவின் புதிய கெடுபிடி

பீஜிங்: வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த, சீனாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால்தான் விசா வழங்கப்படும் என்று சீனா  தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொள்முதல் செய்துள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், வெளிநாட்டினர் சீனா வருவதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சீன தூதரகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், `சீனா செல்ல விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். ஆனால், அவர்கள் சீனாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டிருக்க வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு 2 வாரங்கள் முன்னதாக அவர்கள் முதலாவது அல்லது 2வது டோஸ் எடுத்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் சீனா வந்த பிறகு, கட்டாயமாக 3 வாரங்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : China , 3 Weeks of Isolation Mandatory Visa if Our Country Vaccines: China's New Pestilence
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...