×

பார்சிலோனா அணியில் மெஸ்ஸி 767!

பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ஸாவி பெர்னாண்டஸ் (767 போட்டி, 41 வயது, ஸ்பெயின்) முதலிடத்தில் இருந்தார். லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஹியூஸ்கா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி (33 வயது, அர்ஜென்டினா) அந்த சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஹியூஸ்கா அணியை வீழ்த்தியது. மெஸ்ஸி 13வது மற்றும் 90வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பார்சிலோனா அணிக்காக அவர் 661 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரீஸ்மேன் 35வது நிமிடத்திலும், மிங்குவேஸா 53வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ஹியூஸ்கா சார்பில் ரபா மிர் (45’+4, பெனால்டி) ஆறுதல் கோல் அடித்தார்.

Tags : Messi ,Barcelona , Messi 767 in Barcelona team!
× RELATED சில்லி பாயின்ட்…