வடமேற்கு டெல்லியில் பரபரப்பு: 45 வயது சிஏ சுட்டுக்கொலை

புதுடெல்லி; வடமேற்கு டெல்லியில் 45 வயது சிஏ நேற்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார். வடமேற்கு டெல்லி ஆதர்ஷ்நகர் மஜ்லிஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனில் அகர்வால்.(45). சிஏ(பட்டய கணக்காளர்). நேற்றுகாலை இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். காலை 10 மணி அளவில் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனில் அகர்வாலை அங்கு ஷாலிமார்பாக்கில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆதர்ஷ்நகர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளியை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் பணியை போலீசார் தொடங்கி உள்ளதாக வடமேற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் உஷா ரங்னானி தெரிவித்தார். இன்னொரு கொலை: ஆதர்ஷ்நகரில் இன்னொரு கொலையும் நடந்துள்ளது. ஆசாத்பூரை சேர்ந்தவர் சுரேஷ்(32). குண்டுக்காயம் பட்ட நிலையில் அவர் பிஜேஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது ரஜ்னிஷ்(21) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பழைய பகை காரணமாக சுரேஷை நண்பர் உதவியுடன் சுட்டுக்கொன்றதாக ரஜ்னிஷ் தெரிவித்தார். இதையடுத்து அவரது நண்பரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories: