×

முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கி குட்டி யானை சாவு

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை வனத்துறை ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கக்கநல்லா, கோவில் குளம் பகுதியில் உள்ள குட்டையில் யானை குட்டி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர். இதுதொடர்பாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி என்பது தெரியவந்தது. யானை குட்டியின் அருகில் புலியின் கால் தடங்களும், யானை குட்டியின் உடல் பாகங்களை புலி சாப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. புலி தாக்கியதில் யானைக் குட்டி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அப்பகுதியிலேயே விடப்பட்டது



Tags : Mudumalai forest , Elephant killed by tiger in Mudumalai forest
× RELATED தண்ணீர் தேடி அலையும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை