×

எங்க ஓட்டு உங்களுக்குத்தான்; கண்டிப்பா நீங்கதான் ஜெயிப்பீங்க: மா.சுப்பிரமணியனுக்கு வாக்குறுதியளித்த பொதுமக்கள்

சென்னை: எங்க ஓட்டு உங்களுக்குத்தான், கண்டிப்பா நீங்கதான் ஜெயிப்பீங்க என்று சைதாப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு பொதுமக்கள் வாக்குறுதியளித்துள்ளனர். சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக மா.சுப்பிரமணியன் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று (16ம் தேதி) காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை தாம் வசிக்கும் 171 வது வார்டில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ‘எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான், கண்டிப்பா நீங்கதான் ஜெயிப்பீங்க, நீங்க கவலைப்படாம உங்கள் பிரசாரப் பயணத்தைத் தொடருங்கள்’ என்று பொதுமக்கள் நம்பிக்கை வாக்குறுதியளித்தனர்.

திமுக சைதை கிழக்கு மற்றும் சைதை மேற்கு பகுதி திமுக செயலாளர்கள் ரா.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் சரியாக காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி, 171 வது வார்டில் உள்ள நெருப்புமேடு, ஜோதித்தோட்டம், ஜோதியம்மாள் நகர், செட்டித்தோட்டம், வினாயகபுரம், வி.ஜி.பி. சாலை, கஸ்டமர் காலனி, சென்ட்ரல் எக்ஸ்டன்ஸன் காலனி, அருளாயம்மன்பேட்டை, நாகிரெட்டித்தோட்டம், ஆலாட்சியம்மன் கோயில் தெரு, ரெட்டித்தெரு, மேல்குடியிருப்பு, அன்னை சத்யாநகர், வண்டிப்பாதை, லேபர் காலனி ஆகிய தெருக்களில் உள்ள வீடுகள், கிண்டி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என்பதால் அனைத்து இடங்களுக்கும் சென்று வாக்குச் சேகரித்தார்.

அப்போது இப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர் குறிப்பிட்டதாவது: 2019ம் வருஷம், ஜூலை மாசத்துல, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, மிகப் பெரிய கஷ்டப்பட்டோம், நாம மட்டுமா? சென்னையே திண்டாடிக்கிட்டுதான் இருந்துச்சு. கொடத்த எடுத்துக்கிட்டு, தண்ணீக்காக தெருத்தெருவா படதா பாடு பட்டாங்க. ஆனா, எங்க, சைதைத் தொகுதியில மட்டும், நீங்க செஞ்ச சேவையால, நாங்க நிம்மதியா அன்றாட வேலைகள செய்யிறதுக்கு உதவியா இருந்துச்சு. நீங்களே இரண்டு வேளையும், பெரிய 2 லாரியை வரவச்சி குடிநீர் சப்ளை செய்ததை நாங்க இன்னும் மறக்கல, அதனால இந்தத் தொகுதி மக்கள் சார்பாக நான் சொல்றேன், எங்க ஓட்டு கண்டிப்பா உங்களுக்குத்தான், நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க, கவலைப்படாமல் போங்க’ என்றார் அவர்.

உண்மைதான். ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் ஒரு வேளைக்கு 12 ஆயிரம் லிட்டர் வீதம், ஒரு நாளைக்கு 24 ஆயிரம் லிட்டர் தண்ணீரை லாரி முன்பு அமர்ந்து, அனைவருக்கும் பொறுமையாக ஒவ்வொரு குடமாக, தண்ணீரை தாமே வழங்கினார். இதன் பிறகுதான் நிலத்தடிநீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற சமூக அக்கறையின் காரணமாக, 2019, ஜூலை 5 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூலம் சைதையில் வி.எஸ்.முதலி தெரு, மாரி ஓட்டல் அருகில் 1000 இடங்களில் மழைநீர் சேமிக்கும் புதியத் திட்டத்தை தொடங்கி அதை சைதைத் தொகுதி முழுவதும் செயல்படுத்தியும் காட்டியுள்ளார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் மின்னல் கந்தப்பன், இ.முருகேசன், ஆர்.டி.மூர்த்தி, வி.பி.ஜானகிராமன், சி.பி.இறைவன், வட்டச் செயலாளர்கள் தா.மோகன்குமார், நா.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.செந்தில், நேருநகர் எஸ்.பாட்சா, இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மாணவர் அணி ஜிம் க.பிரபு, கேபிள் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Ma ,Subramaniam , Where to drive is for you; You must win: the public who promised Ma Subramaniam
× RELATED சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு...