×

ரிஷப், இஷான் போல ஆடக்கூடாது... விராட்கோஹ்லி ஒரு உயர்நிலை ஆட்டக்காரர்: இங்கி. மாஜி கேப்டன் சொல்கிறார்

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் அறிமுக அதிரடி வீரர் இஷான் கிஷன் ஒரு முனையில் அடித்து நொறுக்கியது விராட் கோஹ்லிக்கு சுதந்திரமாக ரிலாக்ஸாக ஆட கால அவகாசத்தை வழங்கியது, அழுத்தத்தையும் குறைத்தது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான மைக் ஆத்தர்டன் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லி அகமதாபாத் டெஸ்ட்டில் கடைசியாக டக் அவுட் ஆனார். பிறகு முதல் போட்டியில், ‘ஆக்ரோஷமாக ஆடப்போகிறோம்’ இனி பட்டையைக் கிளப்புவோம், தூள்பறத்துவோம் என்றெல்லாம்  பேசியிருந்தார். ஆனால் கடைசியில் ரஷீத் பந்தை ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடிக்கிறேன் என்று மிட் ஆஃபில் கொடியேற்றி அவுட் ஆனார்.

இதனையடுத்து விராட் கோஹ்லி பேட்டிங் அவ்வளவுதான் என்று பலரும் நினைக்க, 2வது போட்டியில் அவர் இஷான் கிஷனுடன் சேர்ந்து 94 ரன்கள் கூட்டணி அமைத்ததோடு, தன் அடிப்படை நேர்மறையான பேட்டிங் உத்திக்குத் திரும்பி பிறகு அடித்து ஆடும் தன் பழைய பாணிக்கு 73 ரன்கள் அணியை வெற்றிபெற செய்தார். இந்நிலையில் டி20 2வது போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி பேட்டிங் கோஹ்லி மீதான சுமையைக் குறைத்ததால் அவர் சுதந்திரமாக ஆடினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் கூறினார். “முதல் போட்டியில் கொஞ்சம் விராட் கோஹ்லிக்கு அழுத்தம் இருந்தது. ஏனெனில் செய்தியாளர்களிடம் அவர் என்ன கூறினார்,

இனி ஆக்ரோஷ கிரிக்கெட்டைத்தான் ஆடுவோம் என்று முழங்கினார். இந்திய பேட்டிங் வரிசையில் ஆக்ரோஷ வீரர்கள் இருப்பதால் கோலிக்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பட்டையைக் கிளப்புவோம் ஆக்ரோஷம்தான், இத்தனை நாள் பேசிக்கொண்டிருந்தேன். இனி செய்வேன் போன்ற வார்த்தைகளில் கோஹ்லி பேசினார். ஆனால் அது அவருக்கான தேநீர் கோப்பை அல்ல, அது அவரது ஆட்டம் அல்ல என்பதை உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். கோஹ்லி ஒரு உயர்நிலை ஆட்டக்காரர். ரன்களை விரைவாக எடுப்பார், ஆனால் ரிஷப் பன்ட் போலவோ இஷான் கிஷன் போலவோ அல்ல.

எனவே இவர்கள் இறங்கி அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடி ரன்கள் குவிக்க முடியும்போது கோஹ்லி தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடிகிறது. முதல் போட்டியில் ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடிக்க நினைத்தார் அது அவரது ஆட்டம் அல்ல. அவருக்கு நேர்மறையான உத்தியுடன் கூடிய ஆட்டம்தான் சவுகரியமானது. மரபான ஆட்டம்தான் அவருக்கு ஒத்துவரும், அவர் வேகமாக ரன்கள் எடுத்தாலும் அது அந்த வழியில்தான். எனவே என்னைப் பொறுத்தவரையில் 2வது டி20 போட்டியில் கோஹ்லி ஆடியதுதான் கோஹ்லிக்கே உரித்தான ஆட்டப்பாணி, இதிலிருந்து அவர் இளைஞர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளக் கூடாது” என்றார்.

Tags : Rishop ,Ishan ,Viratkohli ,Inki , Rishabh should not play like Ishaan ... Virat Kohli is a top player: Eng. Says the former captain
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ