மாநில இறகுபந்து போட்டி நாமக்கல் பண்ணையாளர்கள் வெற்றி

நாமக்கல் : பல்லடத்தில் நடைபெற்ற இறகுபந்து போட்டியில், நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் முதல் பரிசு பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்களுக்கு இடையேயான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இதில், நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர்கள் முரளி, அரவிந்த் ஜோடி முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் மேலாளர் செல்வகுமார் கேடயம் வழங்கி பாராட்டினார்.

Related Stories:

>