×

ஒட்டன்சத்திரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா!: தேர்தல் அலுவலர், வட்டாட்சியரிடம் திமுக-வினர் மனு..!!

ஒட்டன்சத்திரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக-வினர் தேர்தல் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் சசியிடம் புகார் அளித்துள்ளனர். சி.டி. ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக வேட்பாளர் நடராஜ் மற்றும் அதிமுக-வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர் தெரிவித்ததாவது, அதிமுகவினர் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஆம்புலன்சை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க பிரச்சாரம் செய்யும் வாகனங்களில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை தேர்தல் விதிமுறைகளை மீறி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சிக்கு சார்பாக தேர்தல் நடத்தை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டார்.  இதனிடையே ஒட்டன்சத்திரத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அதிமுக வேட்பாளர் நடராஜ், தனது சகோதரர்களின் 3 மருத்துவமனைகளில் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி வரை வாக்காளர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றார். தனது உறவினருக்கு சொந்தமான மருத்துவமனைகளில் 1 மாதத்திற்கு மக்கள் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம் என்று அதிமுக வேட்பாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் திமுக-வினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.


Tags : Ottanchattaram ,DMK , Ottanchatram, ambulance, ruling party, not paid
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி