பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில், உரிய ஆவணம் இல்லாமல் பனியன் நிறுவன உரிமையாளர்  கொண்டு வந்த ரூ.95 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.  பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு வரப்படும்  பணம் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காலை கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரி பழனிச்சாமி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது காரில் திருமலைநகர் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் முனீஸ்வரன் (38) ஆவணங்கள் இல்லாமல் ரூ.95 ஆயிரத்து 200  கொண்டு வந்தது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் கவுரியிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து இதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முனீஸ்வரனிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

Related Stories: