×

வயநாட்டில் வணிக வளாகத்திற்குள் புகுந்த லாரி-கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு

கூடலூர் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் தலைநகராக உள்ளது கல்பெட்டா. கல்பட்டா வழியாக செல்லும் பெங்களூர் கள்ளிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.கலெக்டர் அலுவலகம் அருகே மிகப் பெரிய அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து கள்ளிக் கோட்டை  நோக்கி சென்ற சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்து சாலையோரமாக இருந்த வணிகவளாகத்திற்குள் புகுந்தது.

இதில் வணிக வளாகம் முழுமையாக சேதம் அடைந்ததுள்ளது. லாரி மோதிய சத்தம் கேட்டு அப்பகுதி மக்ககள் அச்சத்தில் சாலைக்கு ஓடி வந்துள்ளனர். பின்னர் உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரியில் இருந்த ஓட்டுனர் கெளதம் (70) என்பவரை பலத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அடுக்குமாடி வணிக வளாகம் பலமாக சேதமடைந்துள்ளதால் இப்பகுதியை சுற்றிலும் மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கட்டிடத்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கவும், பாதுகாப்பு கருதி கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சாலை வழியான போக்குவரத்தும் மாற்றுச் சாலைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக நேற்று காலை நேரத்தில் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Wayanad , Cuddalore: Kalpetta is the capital of Wayanad district in the state of Kerala. Bangalore Cactus National passing through Kalpatta
× RELATED வயநாட்டில் ராகுல் ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்