திருத்துறைப்பூண்டியில் தீ விபத்து 4 கடை, 6 வீடுகள் எரிந்து சேதம்-ரூ.பல லட்சம் பொருட்கள் கருகின

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள், 6 வீடுகள் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்தில் ரூ.பல லட்சம் பொருட்கள் கருகின.திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் மெயின் ரோட்டில் உள்ள கார்த்திக்ராஜா என்பவரது கூரை வீடு, மணிகண்டன் என்பவர் வீடு, கோழிக்கடை, பாலகுமார் என்பவரின் டீக்கடை மற்றும் வீடு, தங்கராசு என்பவரின் டீக் கடையுடன் வீடு, பெட்டிக்கடை, பக்கிரிசாமி என்பவரின் டீக்கடை மற்றும் வீடு, கண்ணன் என்பவரின் கூரை வீடு உள்ளிட்டவை அடுத்தடுத்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமல் தடுத்தனர். தீவிபத்தில் கடைகள் வீடுகளில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமானது. எப்படி தீ விபத்து ஏற்பட்டது, சேதம் மதிப்பு குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: