எட்டயபுரத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து ஆட்டோ, மொபட் சேதம்

எட்டயபுரம் : கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிய கன்டெய்னர் லாரி சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள நற்கலைகோட்டையை சேர்ந்த அய்யாச்சாமி மகன் பால்ராஜ் (28) ஓட்டினார். எட்டயபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த டிவி, உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, மொபட், சைக்கிள் என மூன்று வாகனங்கள் நொறுங்கின.  எட்டயபுரத்தை சேர்ந்த காதர் (28) என்பவர் ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விட்டு டீக்குடிக்க சென்றதால் அவர் தப்பினார்.

தந்தை இறந்த சோகத்தில் லாரி ஓட்டியதால் விபத்து: கோவில்பட்டியில் லாரியில் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி புறப்படும் போது டிரைவர் பால்ராஜிக்கு அவரது தந்தை இறந்த தகவல் கிடைத்துள்ளது. இதனால் லாரியை தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள கஸ்டம்சில் சீல் வைப்பதற்கு நிறுத்தி விட்டு செல்வதற்கு வேகமாக சென்றுள்ளார். இதனால் தந்தை இறந்த சிந்தனையில் வந்தததால் சாலை வளைவில் கவனத்தை சிதறவிட்டதால் லாரி கவிழ்ந்துள்ளது. நல்ல வேலையாக மதியம் நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எட்டயபுரம் முக்குரோட்டில் அடிக்கடி கவிழும் கன்டெய்னர் லாரிகள். ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: