×

கோவில்பட்டியில் ஆலோசனை கூட்டம் திமுக கூட்டணி வெற்றிக்கு தீவிர களப்பணி-கனிமொழி எம்பி பேச்சு

கோவில்பட்டி : திமுக கூட்டணி வெற்றி பெற தீவிர களப்பணியாற்ற வேண்டுமென கோவில்பட்டியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.

கனிமொழி எம்பி தலைமை வகித்தார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனுக்கு கனிமொழி எம்பி, பொன்னாடை போர்த்தி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

 அப்போது அவர், கூட்டணி கட்சியினர் அனைவரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். இதற்காக தொண்டர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் உற்சாகமாக உழைக்க வேண்டும்’ என்றார்.

 கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சூர்யராஜ், பரமசிவம், தவமணி, சேதுரத்தினம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பீட்டர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன்,

மாவட்ட சிறுபான்மை அமைப்பு பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜ், நகர பொருளாளர் ராமமுர்த்தி, நகர துணைச் செயலாளர்கள் செல்வரத்தினம், காளியப்பன், அன்பழகன், நகர துணை அமைப்பாளர் மயில்கர்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பராஜ், ரவிச்சந்திரன், மாரிச்சாமி, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா, வாசுகி, மாவட்ட செயலாளர் அர்ஜூன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Tags : Divisive Alliance ,Temple of Consultancy Meeting , Kovilpatti: Kanimozhi said in the executive council meeting held in Kovilpatti that the DMK alliance should work hard for success
× RELATED உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி...