×

காங்கயம் தொகுதியில் பிஏபி பாசன விவசாயிகள் 1000 பேர் தேர்தலில் போட்டியிட தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது: இன்று மட்டும் 10 பேர் வேட்புமனு

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து  வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கவேண்டிய தண்ணீர் அளவைவிட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது காங்கயம் சட்டமன்ற தொகுதியில் 1000 வேட்பாளர்களை போட்டியிட செய்வது என கடந்த வாரம் முடிவு செய்தனர். இதற்கான ஆயத்தப் பணிகளுக்காக காங்கயம் கரூர் சாலையில் விவசாயிகள் நேற்று தேர்தல் பணிமனையை துவக்கியுள்ளனர். தற்போது வரை 50 வேட்பு மனுக்களை பெற்றுள்ள விவசாயிகள் அதில் முதற்கட்டமாக 10 வேட்பு மனுக்களை இன்று (16ம் தேதி) தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags : Kangayam , Polling booth opened for 1000 BAP irrigated farmers in Kangayam constituency: Only 10 candidates today
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...