×

பெங்களூரு, டெல்லி உள்பட10 இடங்களில் என்ஐஏ சோதனை: 5 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

பெங்களூரு: பெங்களூரு, டெல்லி, கேரளா உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 5 ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் வாயிலாக ஐ.எஸ் தீவிரவாதத்துக்கு  ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு குண்டு வெடிப்பு நிகழ்த்துவது குறித்து பயிற்சி அளித்திருப்பதாகவும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மெட்ரோ சிட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத  அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்களை தீவிரவாத  அமைப்பில் சேர்த்து, குண்டு வெடிப்பு நிகழ்த்துவது குறித்த பயிற்சி அளித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து மத்திய உளவுத்துறை தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கும்  இடங்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கூறப்பட்ட, கர்நாடகா, டெல்லி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி கர்நாடகத்தில் 4, 5 இடங்களில் இந்த சோதனை  நடந்துள்ளது. டெல்லி, கேரளாவில் 6 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 10 இடங்களில் 48 மணி நேரம் நடந்த இந்த தேசிய புலனாய்வு ரகசிய சோதனையில், குண்டு வெடிப்பு நிகழ்த்துவது மட்டுமின்றி தீவிரவாத அமைப்பிற்கு ஆள்  சேர்க்கும் பணியில் ஈடுபட்ட 5 ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்கள் ரகசிய இடங்களில் வைத்து விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள், மேலும் சிலரை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். என்.ஐ.ஏவின் இந்த  சோதனை மற்றும் கைது நடவடிக்கையால், பெங்களூரு நகரில் மீண்டும் பரபரப்பு ஏற்படுள்ளது.


Tags : NIA ,Bangalore, Delhi , NIA raids 10 locations including Bangalore, Delhi: 5 IS militants arrested
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...