×

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி: முதல்வர் வேட்பாளராக கிருஷ்ணசாமி நிறுத்தம்

சென்னை: அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த புதிய தமிழகம் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ள 60 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சென்னையில் நேற்று வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கிருஷ்ணசாமி பேசியதாவது: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டப்பட்டது. இதில், 60 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும். சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.

கட்சியின் தலைவரான நானே முதல்வர் வேட்பாளர். கடந்த 30 வருடங்களாக புதிய தமிழகம் கட்சி, தமிழகத்தில் அரசியல் நிலையை கொண்டுள்ளது. இலவசங்களால் மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். . கட்சியின் திட்டங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை 17ம் தேதி அறிவிப்பேன். ஓட்டப்பிடாரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எத்தனை தொகுதியில் மொத்தமாக போட்டியிடுகிறோம் என்பது குறித்து 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தெரியப்படுத்துவோம். இவ்வாறு கூறினார்.


Tags : New Tamil Nadu ,AIADMK ,Krishnasamy ,CM , New Tamil Nadu party withdraws from AIADMK alliance
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...