×

அமமுக சாதிக் கட்சியா? தனித்தொகுதிகளில் போட்டியிடாமல் தேமுதிகவுக்கு தள்ளிய டிடிவி.தினகரன்: மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

டிடிவி அணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை அமமுக ஒதுக்கியது. அதில் 21 தனித் தொகுதிகளும் அடங்கும்.அதில், திருவிக நகர், எழும்பூர், செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்காரை, செங்கம், திண்டிவனம், வானூர், கள்ளக்குறிச்சி, பவானிசாகர், கூடலூர், அவிநாசி, வால்பாறை, நிலக்கோட்டை, கிருஷ்ணராயபுரம், பெரம்பலூர், திட்டக்குடி, கீவளூர், பரமக்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 39 பொதுத் தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 44 தனித் தொகுதிகள் உள்ளன. அதில் மழைவாழ் மக்களுக்கு 2 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாதி தொகுதிகளை தேமுதிகவுக்கு அமமுக தள்ளிவிட்டுள்ளது. இது அமமுகவில் உள்ள தலித்துகளை அதிர வைத்துள்ளது. ஏற்கனவே அமமுக ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் கட்சி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதற்கு ஏற்றார்போலத்தான், அந்த சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் கணிசமான ஓட்டுக்களை அக்கட்சி வாங்கியுள்ளது. இப்போது தன்னிடம் உள்ள பெரும்பாலான தனித் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளி விட்டுள்ளது. அதைத் தவிர டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தனித் தொகுதியை தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசனுக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதியை மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்துக்கும் வழங்கியுள்ளார். திருத்துறைப்பூண்டியில்தான் டிடிவி.தினகரனின் சொந்த ஊரும் வருகிறது. தன்னுடைய பகுதியில் உள்ள தனித் தொகுதிகளில் அவர் போட்டியிட விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு அமமுகவினர் மத்தியில் உள்ளது.

திருவிடைமருதூர் தொகுதியில் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட சேட்டு என்பவர் அமமுகவில் சீட்டு கேட்டு மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் இருள்நீக்கி சேகர், இளவரசியின் சகோதரர் அண்ணாதுரை மூலம் சிபாரிசு செய்து தனக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். கீவளூர் தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செல்வி செங்கொடி எப்படியும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். நாகையில் பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் வக்கீல் கிங்க்ஸ்லி ஜெரால்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவருக்கும் வழங்கப்படவில்லை. தன் கட்சியிலேயே பலர் கேட்டும் கொடுக்காமல் தள்ளிவிட காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். நேர்காணலின்போது, ஒரு கோடி ரூபாய் பணம் கட்டினால் தொகுதி என்று தினகரன் நேரடியாக பலரிடம் கேட்டுள்ளார். பணம் கட்டாதவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், தஞ்சாவூர் -ஏ.ஜி.தங்கப்பன், பாபநாசம்- ரங்கசாமி, கும்பகோணம்-பாலமுருகன், ஒரத்தநாடு-மா.சேகர், மன்னார்குடி- எஸ்.காமராஜ், நன்னிலம்- அக்ரி.ராமசந்திரன், நாகப்பட்டினம்- மஞ்சுளா சந்திரமோகன், வேதாரண்யம்- பி.எஸ்.ஆறுமுகம், திருவையாறு -வேலு.கார்த்திகேயன் ஆகியோர் டிடிவியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த பகுதிக்கான வேட்பாளரை அந்த பகுதியைச் சேர்ந்த மண்டல பொறுப்பாளர் ரங்கசாமியே தேர்வு செய்யுள்ளார். இதனால்தான் முக்குலத்தோரில், டிடிவியின் சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோரில் வேறு பிரிவினர் நிறுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது அமமுகவினரிடையே பேசும்பொருளாக மாறியுள்ளது.

Tags : Aam ,Aadmi Party ,DTV.Dhinakaran ,Temutika , Aam Aadmi Party? DTV.Dhinakaran pushes Temujin out of contest in separate constituencies
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...