×

அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் தடை

புதுடெல்லி: அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள் வரிசயைில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலியும் இணைந்துள்ளன. இதனால், இந்தியாவில் இதன் கோவிஷீல்டு தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி  உள்ளது.  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் சுமார்  3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சில வெளிநாடுகளில் அஸ்ட்ரஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகாரின்  அடிப்படையில் டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளில் அஸ்ட்ரஜெனகா மருந்தை தற்காலிகமாக தடை செய்தன. நேற்று முன் தினம் அயர்லாந்து அரசும் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்தது.

இந்நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.  ஆனாலும், இந்தியாவில்  அஸ்ட்ரஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து மத்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. கோவிஷீல்டு பாதுகாப்பு, ஆபத்தில்லை என்றே அரசு தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



Tags : Germany ,Italy ,France , Germany, Italy, France ban AstraZeneca corona vaccine
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...