தர்ஷன் நடித்த சினிமாவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டவர் கைது

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் ராபர்ட் திரைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை மாகடிரோடு போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட திரையுலக சேலஞ்ஜிங் ஸ்டார் தர்ஷனின் ராபர்ட் திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதை ஏற்று நடவடிக்கை எடுத்த போலீசார் நேற்று இந்த வழக்கு தொடர்பாக யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாத் (19)என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ராபர்ட் திரைப்படம் தொடர்பான இணைய தள லிங்கை வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த மாகடிரோடு போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>