தாமதமாகும் ராணி ஜான்சி மேம்பாலப்பணிகள் திட்டச் செலவுத் தொகை 409% உயர்த்தப்பட்டது ஏன்?: ஆம் ஆத்மிக்கு பாஜ பதில் கேள்வி கேட்டு பதிலடி

புதுடெல்லி: ராணி ஜான்சி மேம்பாலம் கட்டி முடிக்கப்படுவதில் ஏன் தாமதம் செய்யப்படுகிறது என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியபோது, சிக்னேச்சர் பாலம் ஏன் 5 ஆண்டுகள் தாமதமாக முடிக்கப்பட்டது என  பாஜ கட்சி எம்எல்ஏக்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான சவுரவ் பரத்வாஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராணி ஜான்சி மேம்பாலம் கட்டும் பணியில் தேவையறற தாமதம் செய்யப்படுவதாக கூறினார்.

இதுபற்றி பரத்வாஜ் மேலும் தெரிவித்ததாவது:  ராணி ஜான்சி மேம்பாலம் பணியை குறித்த காலத்தில் முடிக்காததால் கூடுதலாக 409 சதவீதம் செலவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தாமதம் ஏன் என பாஜவின் ஆதேஷ் குப்தாவிடம் விளக்கம் கேட்டு இருந்தோம். குிறப்பாக, இந்த ராணி ஜான்சி பாலம் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 24 ஆண்டுகள் எடுப்பது ஏன்? என கேட்டோம். இந்த தாமதத்தினால் சுமார் 409 சதவீதம் செலவுத்தொகையை உயர்த்தியுள்ளனர். அதாவது 175 கோடியிலிருந்து 724 கோடியாக திட்டச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலத்தின் ஒரு பகுதி தேவாலயத்திற்கு சொந்தமானது என்று எங்களுக்குத்  தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், அபிஷேக் குப்தா என்பவருக்கு எதற்காக 27 கோடி கட்டணம்  வழங்கப்பட்டது?  அபிஷேக் குப்தா தேவாலயத்தில் ஒரு உறுப்பினரா அல்லது  கிறிஸ்தவ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறாரா என்று  நான்  சந்தேகிக்கிறேன். மேலும் நில ஆர்ஜிதம் என்பது மாநில அரசின் மூலம் செய்யப்பட வேண்டியதாகும். குறிப்பாக,  நிலம் கையகப்படுத்தலும் குறிப்பிட்ட விதிகளின்படி நடக்க  வேண்டும். அதற்காகவே பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட துறை உள்ளது. ஆனால், பாஜ தலைவர்கள் ஏன் சம்பந்தப்பட்ட துறையை அதன் பணிகளை  செய்ய விடவில்லை. அதற்கு பதிலாக பொறியியல் துறையுடன் கைகோர்த்தார்கள்? அது  ஏன் தனியார் நிலத்தை வாங்கி தனியாருக்கான விலையில் விற்றது? ”. இவ்வாறு பரத்வாஜ் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

சிக்னேச்சர் பாலத்தின் செலவு 1575 கோடியானது எப்படி?

பாஜ தரப்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: சிக்னேச்சர் பாலத்தின் திட்ட மதிப்பீடு 887 கோடி மட்டுமே. ஆனால், அது எப்படி பின்னர் 1575 கோடி வரை உயர்ந்தது. அதிகமாக 688 கோடி செலவிடப்பட்டது ஏன்? சிக்னேச்சர் பாலம் கட்டி திறக்க ஏன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானது?. கடந்த சில வாரங்களாக, வடக்கு டி.எம்.சியின் ராணி ஜான்சி சாலை மேம்பாலம்  திட்டம் தொடர்பான நில இழப்பீட்டுத் தொகை குறித்து சவுரப் பரத்வாஜ்  உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். உண்மையில், ஆறு ஆண்டுகள் இவர்கள் ஆட்சியின் இருந்தும் கூட, உண்மை நிலையை தெரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: