டெல்லியிலிருந்து காஜிப்பூர் செல்லும் என்எச்-24 சாலை மீண்டும் திறப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியிலிருந்து காஜியாபாத் செல்லும் என்எச்-24 சாலை பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள பிற மாநில விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26ம் தேதியன்று விவசாயிகள் டெல்லியின் மூன்று எல்லைகளில் இருந்து டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதுாக்க, கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் டெல்லி-காஜியாபாத் நெடுஞ்சாலை-24 மூடப்பட்டது.

இநத சரக்கு வாகனங்கள் சென்றுவருவதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர் காஜிப்பூர் எல்லையில் உள்ள என்எச்-24 சாலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது டெல்லியிலிருந்து காஜியாபாத் செல்லும்சாலை திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: