×

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்பேட் மே 1-ம் தேதி வெளியாகும்: இயக்குனர் போனி கபூர் ட்வீட்

சென்னை: அஜித் நடித்த வலிமை அப்டேட் அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாள் மற்றும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என இரட்டை விருந்து அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.



Tags : Ajith ,Bonnie Kapoor , Ajith, Strength, Update, May 1, Bonnie Kapoor
× RELATED சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்