×

தமிழகத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.108.45 கோடி பரிசுப் பொருட்கள் பறிமுதல்!: சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட மொத்தம் 108 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்திருக்கிறார். மார்ச் 12ம் தேதி முதல் இன்று மதியம் வரை மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 58 ஆண் வேட்பாளர்களும், 1 பெண் வேட்பாளரும் அடங்குவர் என்று சத்யபிரதா சாகு குறிப்பிட்டார்.

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளை செலவின பார்வையாளர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 53 கோடியே 67 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 65 கோடியே 78 லட்சம் ரூபாய் தங்கம், வெள்ளி புடவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என மொத்தம் 108 கோடியே 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சத்யபிரதா சாகு கூறியிருக்கிறார்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான லிங்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 16 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். சி.விஜில் என்ற செயலியை டவுன்லோட் செய்து தேர்தல் முறைகேடுகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம் என்றும் தற்போது வரை 1120 புகார்கள் பதிவாகின என்றும் அவற்றில் தகுதியுள்ள 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாகு கூறியிருக்கிறார்.


Tags : Tamil Nadu ,Satyapratha Saku , Tamil Nadu, Rs 108.45 crore, gift items, Satyaprada Sagu
× RELATED வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி