×

சூடுபிடிக்கிறது தேர்தல் களம்... அதிமுக அமைச்சர்கள், திமுக வேட்பாளர்கள், கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல்!!

சென்னை : கொரோனா பரவல் முடிவுக்கு வராத சூழலில் அமைச்சர்கள் படை சூழ வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ சுமார் 3 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும்போது சாலையோரம் நின்றிருந்த மூதாட்டிகளின் காலில் விழுந்து அமைச்சர் உதயக்குமார் ஆசிர்வாதம் வாங்கினார்.

*அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அதற்காக அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரிந்தார்.

விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

*தருமபுரி – பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வேட்புமனு தாக்கல் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுவை கொடுத்தார்.

*தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

*ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

*மதுரை மேற்கு அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

*திமுகவினர் வேட்பு மனு தாக்கல்

*சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

*காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

*சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி. மோகன்ராஜ்ஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

*திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மேயருமான, தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

*பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

பாஜகவினர் வேட்பு மனு தாக்கல்

*கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமமுகவினர் வேட்பு மனு தாக்கல்

*கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கர நாராயணனிடம், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம்

*கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி

*திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : AIADMK ,DMK ,Kamal Haasan ,DTV Dinakaran ,Seeman , AIADMK, Ministers, DMK, Candidates, Kamal Haasan, DTV Dinakaran, Seeman
× RELATED திமுக கூட்டணியை ஆதரித்து வரும் 29ம்...