தென்னிந்திய ஜூனியர் டென்னிஸ் கிரிக்கெட் போட்டி விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் முதலிடம்

திருச்செங்கோடு : திருவள்ளூரில் தென்னிந்திய அளவிலான ஜூனியர் டென்னில் பால் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டி, கேரளா,தெலுங்கானா ஆகிய 6 மாநில அணிகள் பங்கேற்றது.இறுதிப்போட்டியில் தமிழக அணி தெலங்கானா ஆணியை வீழ்த்தி, முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

போட்டியில் முதலிடம் பெற்ற விவேகானந்தா வித்யா பவன் மாணவிகளான அபிநயா, லிகிதாஸ்ரீ, கீர்த்தனா, காவியாஸ்ரீ, ஸ்ரீமதி, ஹர்சினி, ரிதனிபிரியங்கா, நிகிதா, சந்திரா, சந்தன கஸ்தூரி, ரெபெக்கா சில்வியா, சைலேந்திர வர்சினி, கன்னிகா ஆகியோரை கல்லூரி தலைவர் கருணாநிதி, மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண் இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் கிருபாநிதி, டாக்டர் நிவேதனா கிருபாநிதி, முதன்மை  நிர்வாகி சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குனர் வரதராஜன், குப்புசாமி மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories:

>