×

ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கிராமத்தில் ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதமாகியும் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி-பள்ளி மாணவர்கள் கடும் அவதி

*இது உங்க ஏரியா

ஜெயங்கொண்டம் : தத்தனூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை கடந்த ஆறு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் ஊராட்சியை சேர்ந்த நடுவெளி கிராமத்திலிருந்து பொட்டக்கொல்லை கிராமம் வரை சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடுவெளி கிராமத்திலிருந்து பொட்ட கொல்லையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் நடுவெளி கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பொட்ட கொல்லை வரை தார் சாலையை செப்பனிட கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது. அதன் பின்னர் சாலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கிராமத்தை சுற்றி வேறு சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலையில் இரவு நேரத்தில் வரும் பொழுது தவறி விழுந்து முதியவர்கள் பலர் காய முற்றுள்ளனர். நடந்து கூட செல்ல முடியாத அளவில் கூர்மையாக உள்ள கற்கள் மீது சைக்கிளிலும் பைக்கிலும் செல்ல முடியவில்லை பொட்டகொல்லை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கும் மாணவ, மாணவிகள் செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது எனவும், விரைந்து இந்த சாலையை செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dathanur ,Jayangondam , Jayangondam: The road leading to the primary health center in Thathanur village has been lying idle for the last six months.
× RELATED ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ