தேமுதிகவைத் தொடர்ந்து அதிமுகவிற்கு குட்பை சொன்ன புதிய தமிழகம்: ஒட்டப்பிடாரத்தில் தனித்துப் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி அண்மையில் அங்கிருந்து விலகியது. இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.  

கடந்த 1996ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் தனித்துப்  போட்டியிட்டு வென்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. பிறகு கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த தேமுதிக- அமமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.தேமுதிகவுக்கு அமமுக கூட்டணியில் 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: