×

முசிறி அருகே கல்லூரில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்-விவசாயிகள் மகிழ்ச்சி

முசிறி : முசிறி தாலுகாவில் குணசீலம் ஊராட்சி அமைந்துள்ளது. குணசீலம் பகுதியைச் சுற்றி காவிரி டெல்டா பாசன பகுதி என்பதால் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும்.அறுவடைக் காலங்களில் குணசீலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் குணசீலம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களுக்கு கல்லூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் தனியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் கலெக்டர் சிவராசுவை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை நேரடி கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதையடுத்து குணசீலத்தில் ஒரு நெல் கொள்முதல் நிலையமும்,கல்லூர் கிராமத்தில் மற்றொரு நெல் கொள்முதல் நிலையமும் அமைக்க உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து கல்லூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கூறும்போது கல்லூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளதால் கல்லூர் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் நெல்லை சந்தைப்படுத்த குணசீலத்திற்கு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. கல்லூர் கிராமத்திலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நேரமும் வாகன செலவும் குறைகிறது என்றார்.

Tags : Extra ,Station ,Mussoorie , Musiri: Gunaseelam panchayat is located in Musiri taluka. Paddy yield as the Cauvery delta is an irrigated area around Gunaseelam area
× RELATED சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்